/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியை அடித்த ஆசிரியை பள்ளியை உறவினர்கள் முற்றுகை
/
மாணவியை அடித்த ஆசிரியை பள்ளியை உறவினர்கள் முற்றுகை
மாணவியை அடித்த ஆசிரியை பள்ளியை உறவினர்கள் முற்றுகை
மாணவியை அடித்த ஆசிரியை பள்ளியை உறவினர்கள் முற்றுகை
ADDED : அக் 10, 2025 11:52 PM
புழுதிவாக்கம், வகுப்பறையில் மை கொட்டியதற்காக மாணவியை அடித்த ஆசிரியையை கண்டித்து, மாநகராட்சி தொடக்கப்பள்ளியை, உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
உள்ளகரம், நியூ இந்தியன் காலனியைச் சேர்ந்த தனலட்சுமியின் மகள் லித்திக் ஷா, 11. இவர், புழுதிவாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு பயில்கிறார்.
நேற்று முன்தினம், வகுப்பறையில் 'இங்க்' பேனாவை திறந்தபோது அவரது சட்டை, பாவாடை மற்றும் தரையில் மை கொட்டியது.
இதை பார்த்த தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, மை கொட்டியதற்காக தரையை துடைக்கும் 'மாப்பு' குச்சியால் மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. மாணவிக்கு கை, காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
வீட்டுக்கு சென்றதும், நடந்தது குறித்து தன் தாய் தனலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர், நேற்று காலை, உறவினர்களுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டார். அங்கிருந்த ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மடிப்பாக்கம் போலீசார் மற்றும் தொடக்கப் பள்ளி உதவி கல்வி அலுவலர் சுஜாதா மற்றும் கவுன்சிலர் ஆகியோர், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினரிடம் சமரச பேச்சு நடத்தினர். தலைமை ஆசிரியை மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.