/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துரைப்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் 120 லாரி மண் கொட்டியதால் நிம்மதி
/
துரைப்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் 120 லாரி மண் கொட்டியதால் நிம்மதி
துரைப்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் 120 லாரி மண் கொட்டியதால் நிம்மதி
துரைப்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் 120 லாரி மண் கொட்டியதால் நிம்மதி
ADDED : ஜன 22, 2025 12:45 AM
துரைப்பாக்கம்துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மொத்தம், 3 ஏக்கர் பரப்பில், 40 வகுப்பறைகள் உள்ளன.
இந்த பள்ளியை ஒட்டி, தெற்கு திசையில் ரேடியல் சாலை - இ.சி.ஆர்., விரிவாக்கம் செய்யப்பட்டது. கிழக்கு திசையில் காலி இடம், மேற்கு திசையில் ஓ.எம்.ஆர்., உள்ளது.
சாலை மட்டத்தைவிட, 5 அடி தாழ்வாக பள்ளி உள்ளது. கடந்த பருவமழையில், பகிங்ஹாம் கால்வாய் செல்ல வேண்டிய மழைநீர், பள்ளி வளாகத்தில் தேங்கியது.
அதோடு, ஊற்று அதிகரித்ததால் வகுப்பறைகளில் வெள்ளம் சூழ்ந்தது. நீரை இறைக்க ஒரு வாரம் வரை ஆனது. இதனால், மாணவ - மாணவியர் படிப்பு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வளாகத்தில் மண் கொட்டி உயர்த்த மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்காக, மாநகராட்சி இடங்களில், ஏற்கனவே கொட்டி வைத்த மண் மற்றும் தனியார் கட்டுமான பணி தளத்தில் உள்ள மண் எடுத்து, பள்ளி வளாகத்தில் கொட்டப்பட்டது. இந்த வகையில், ஒரு மாதத்தில், 120 லாரிகளில் மண் கொட்டப்பட்டு உள்ளது.
இதற்கு, பணம் வாங்காமல் கட்டுமான நிறுவனங்கள் மாநகராட்சிக்கு உதவின. மழைநீர், பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், சற்று சாய்வாக மண் கொட்டி சமப்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால், பருவமழைக்கு வெள்ள பாதிப்பு ஏற்படாது என, மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளதால், ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் நிம்மதி அடைந்துள்ளனர்.