/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெரிசலில் பலியான இருவர் குடும்பத்திற்கு நிவாரணம்
/
நெரிசலில் பலியான இருவர் குடும்பத்திற்கு நிவாரணம்
ADDED : அக் 20, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அக். 20--
இந்திய விமான படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், விமான படையின் பிரமாண்ட வான்வெளி சாகசம் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன், கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் ஆகியோர் உயிரிழந்தனர்.
இருவரின் குடும்பத்திற்கும், முதல்வர் பொது நிவாரண நிதியில் தலா ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். நிகழ்வில், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மேயர் பிரியா உடனிருந்தனர்.