/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் மாநகராட்சியில் விளம்பர பேனர்கள் அகற்றம்
/
தாம்பரம் மாநகராட்சியில் விளம்பர பேனர்கள் அகற்றம்
ADDED : பிப் 04, 2024 02:13 AM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், துாய்மையை பராமரிக்கும் வகையில் திடக்கழிவுகளை அகற்றுதல், கண்கவரும் வண்ண ஓவியம் வரைதல் உள்ளிட்ட அழகுப்படுத்தும் பணிகள் நடக்கின்றன
இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்கு உட்பட்ட 1, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் கள ஆய்வு செய்யப்பட்டு, கட்டடங்களின் மீது வைக்கப்பட்டிருந்த 14 விளம்பர பேனர்கள், 139 விளம்பர தட்டிகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.
மாநகராட்சிக்குட்பட்ட தெருக்கள், சாலை, மின் கம்பம், கட்டங்கள் மீது விளம்பர பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.