/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நந்தம்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
நந்தம்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : பிப் 04, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நந்தம்பாக்கம், :நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நசரத்புரம் பகுதி, பரங்கிமலை கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு உட்பட்டது. அங்கு, 25 ஆண்டுகளாக, 14க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.
தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதி எனக்கூறி, பரங்கிமலை கன்டோன்மென்ட் நிர்வாகத்தினர், போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை அகற்ற, ஜே.சி.பி., இயந்திரத்துடன் நேற்று சென்றனர்.
இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உதவியுடன், ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டன. அவர்கள், அங்குள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.