/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை விபத்திற்கு காரணமான பிளாஸ்டிக் வேகத்தடை அகற்றம்
/
சாலை விபத்திற்கு காரணமான பிளாஸ்டிக் வேகத்தடை அகற்றம்
சாலை விபத்திற்கு காரணமான பிளாஸ்டிக் வேகத்தடை அகற்றம்
சாலை விபத்திற்கு காரணமான பிளாஸ்டிக் வேகத்தடை அகற்றம்
ADDED : செப் 08, 2025 06:18 AM
திருவொற்றியூர்: எண்ணுார் விரைவு சாலையில் விபத்திற்கு காரணமாக இருந்த பிளாஸ்டிக் வேகத்தடை அகற்றப்பட்டது.
எர்ணாவூர் - பாரதியார் நகர் சந்திப்பு துவங்கி காசிமேடு வரையிலான, 5 கி.மீ., துாரம் எண்ணுார் விரைவு சாலையில் அதிக போக்குவரத்து இருக்கும். சென்னை துறைமுகம் நோக்கி செல்லக்கூடிய கன்டெய்னர், டிரைலர் லாரிகளுக்கு இவ்வழியே பிரதானம்.
இந்நிலையில், விரைவு சாலையின் இருபுறமும், 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. கடைவீதி, பள்ளி கல்லுாரி, மருத்துவமனை உட்பட அத்தியாவசிய தேவைகளுக்காக, இப்பகுதி மக்கள் எண்ணுார் விரைவு சாலையை கடக்க வேண்டியுள்ளது.
இது போன்ற வேளைகளில், கனரக வாகனங்களில் அடிபட்டு, உயிரிழப்பு ஏற்பட்டு வந்தன. தீர்வாக, பொதுமக்கள் சாலையை கடக்கும் இடங்களில், வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்தது. அதன்படி, மாநகராட்சி சார்பில், தற்காலிக பிளாஸ்டிக் வேகத்தடைகள், அப்பர் சாமி கோவில் தெரு, காலடிப்பேட்டை, செரியன் நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டன.
அவை, கனரக வாகன போக்குவரத்தால் உடைந்து, 'ஸ்கூரு' வடிவிலான ஆணிகள் வாகனங் களின் டயர்களை பதம்பார்த்தன. குறிப்பாக ஸ்கூட்டர், டூ - வீலர், ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின. தவிர, பிளாஸ்டிக் வேகத்தடையால், கர்ப்பிணியர், முதியோர் கடும் சிரமத்தை சந்தித்தனர். எனவே, அவற்றை மாற்றி, ஜல்லிகளால் அமைக்கப்படுவதை போன்றே வேகத்த டை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.
அதன்படி, எண்ணுார் விரைவு சாலையின் அனைத்து பிளாஸ்டிக் வேகத்தடைகளும் அகற்றப்பட்டு, தார் ஜல்லிகளாலான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.