/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி பள்ளியில் தேங்கிய மழை நீர் அகற்றம்
/
மாநகராட்சி பள்ளியில் தேங்கிய மழை நீர் அகற்றம்
ADDED : டிச 03, 2024 12:59 AM

ஆவடி,
ஆவடி மாநகராட்சி 8வது வார்டு, திருமுல்லைவாயில், எட்டியம்மன் நகரில் மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது.
இங்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 300 க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், பெஞ்சல் புயலின் போது பெய்த கனமழையால், பள்ளியில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் தேங்கி நின்றது.
இதனால், மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். தகவலறிந்த அந்த வார்டு கவுன்சிலர் சக்திவேலன், நேற்று காலை, மாநகராட்சி உதவியுடன், டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் வாயிலாக மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டார்.
'பள்ளியில், மழைநீர் குளம்போல் தேங்காமல் இருக்க, சிமென்ட் கற்கள் பதிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளதாக' அதிகாரிகள் தெரிவித்தனர்.