/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் அகற்றம்
/
பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் அகற்றம்
ADDED : டிச 05, 2024 12:20 AM

நெசப்பாக்கம், -
கோடம்பாக்கம் மண்டலம், 137 வது வார்டு நெசப்பாக்கம் ஏரிக்கரை தெருவில், சென்னை மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
'பெஞ்சல்' புயல் தாக்கத்தால் பெய்த மழையில், பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, மின் மோட்டார் வாயிலாக மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சி பள்ளி வளாகம் சாலை மட்டத்தில் இருந்து, 1.5 அடி தாழ்வாக உள்ளது. மேலும், மழைக்காலத்தில் பூமியில் இருந்து ஊற்று நீர் மற்றும் அருகில் உள்ள காலி இடத்தில் இருந்தும் மழைநீர் பள்ளி வளாகத்திற்குள் வருவதால் நீர் தேங்கியது' என்றனர்.