/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அயனாவரம் காசிவிஸ்வநாதர் குளம் சீரமைப்பு துவக்கம்
/
அயனாவரம் காசிவிஸ்வநாதர் குளம் சீரமைப்பு துவக்கம்
ADDED : ஜூன் 23, 2025 01:49 AM
சென்னை:சென்னை, அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் குளம், பொது நலநிதி மற்றும் திருக்கோவில் நிதியில் இருந்து, 97 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்படுகிறது. இப்பணியை, ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.
பின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:
இந்த கோவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள சிலைகள் காசியில் இருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டவை. அதிக தெய்வீகத்தன்மையோடு பக்தர்களின் அனைத்து வேண்டுதல்கள் நிறைவேறும் கோவிலாக உள்ளது.
இங்குள்ள குளம், தர்ப்பணம், திதி செய்ய பயன்படுகிறது. மாநகராட்சி பராமரித்த இந்த குளத்தை, பொதுநல நிதி 77 லட்சம் ரூபாய்; கோவில் நிதி 20 லட்சம் ரூபாய் என, 97 லட்சம் ரூபாயில் அறநிலைத்துறை சீரமைக்கிறது. கழிப்பறை வசதியுடன், இரண்டு தர்ப்பண மண்டபங்களும் அமைக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலைத்துறை கமிஷனர் ஸ்ரீதர், மண்டல இணை கமிஷனர் முல்லை, உதவி கமிஷனர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.