புழுதிவாக்கம் சித்தேரியில் சீரமைப்பு பணி தொடக்கம்
புழுதிவாக்கம் சித்தேரியில் சீரமைப்பு பணி தொடக்கம்
ADDED : செப் 04, 2026 04:21 PM
புழுதிவாக்கம்: பெருங்குடி மண்டலம், 186வது வார்டுக்கு உட்பட்ட புழுதிவாக்கத்தில் உள்ள சித்தேரியை, வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் துார்வார, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் ஆக., 8ல் செய்தி வெளியானது.
இதையடுத்து, ‘எம்.எஸ்.எஸ்., டிரஸ்ட் கிரீனர் அண்டு கிளீனர்’ தொண்டு நிறுவனத்துடன் ‘எஸ்.வி., பவுண்டேசன், ஜியோ, ஜே.கே., பில்டர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று, சித்தேரியை துார்வாரி சீரமைக்கும் பணியில் களமிறங்கி உள்ளன.
இதுகுறித்து தொண்டு நிறுவனத்தினர் கூறியதாவது:
ஆகாயத்தாமரைகள் மற்றும் குப்பை கழிவுகளை முழுமையாக அகற்றி, ஏரியை ஆழப்படுத்தி, சீமை கருவேல மரங்களை அழித்து, பறவைகள் தங்குவதற்கேற்ப நான்கு தீவுகள் அமைக்கப்படும். மாநகராட்சியிடம் அனுமதி பெற்றே, இப்பணி நடக்கிறது.
ஏரியில் துார்வாரும் மண், அருகிலுள்ள விளையாட்டு திடல் மற்றும் நடைபாதை மேம்படுத்தப்படும். இதற்காக 20 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
‘தினமலர்’ நாளிதழ், செய்தி வாயிலாக சுட்டிக்காட்டியதாலே சித்தேரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
