/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீரமைப்பு பணி அரைகுறை: வாகன போக்குவரத்து பாதிப்பு
/
சீரமைப்பு பணி அரைகுறை: வாகன போக்குவரத்து பாதிப்பு
சீரமைப்பு பணி அரைகுறை: வாகன போக்குவரத்து பாதிப்பு
சீரமைப்பு பணி அரைகுறை: வாகன போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 16, 2025 06:50 AM

கே.கே.: கே.கே., நகரில், பாதாள சாக்கடை குழாய் உடைந்து ஏற்பட்ட பள்ளத்தை, மண் கொட்டி சீரமைத்த நிலையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கே.கே., நகர் மற்றும் நெசப்பாக்கம் பகுதியை இணைக்கும் ராமசாமி சாலையில், கடந்தாண்டு பாதாள சாக்கடை குழாய் உடைப்பால், மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பள்ளம் சரி செய்யப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், அதே பகுதியில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் பாதாள சாக்கடை குழாய் உடைப்பை சீர்செய்து, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் மண் கொட்டி சீரமைத்தனர்.
ஆனால், அப்பணியை முறையாக செய்யாததால், சகதியாக மாறியுள்ளது. அதன் வழியே வாகனங்களில் சென்றோர் தடுமாறி விழுந்ததால், பள்ளத்தை சீரமைத்த பகுதியில் தடுப்பு கம்பி அமைக்கப்பட்டு உள்ளது.
அதையொட்டிய எஞ்சிய சாலையில் வாகனங்கள் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

