/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூலக்கொத்தளம் கால்பந்து மைதானம் சீரமைப்பு பணி
/
மூலக்கொத்தளம் கால்பந்து மைதானம் சீரமைப்பு பணி
ADDED : ஜூலை 07, 2025 04:12 AM

ராயபுரம்:மழைக்காலங்களில் பாதிக்கப்பட்டு வந்த மூலக்கொத்தளம் சுடுகாட்டை ஒட்டியுள்ள கால்பந்து மைதானத்தை, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடக்கிறது.
ராயபுரம், மூலக்கொத்தளம் சுடுகாட்டை ஒட்டி உள்ள கால்பந்து மைதானத்தை, நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில், இந்த மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பது வாடிக்கை. இதனால், பாசி படர்ந்து, பல நாட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அப்பகுதி இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று, 60 லட்சம் ரூபாய் செலவில் மைதானத்தை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, நிலத்தை சமன்படுத்தி மின் விளக்குகள் மற்றும் கேலரி அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.