/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன் கடைக்கு சதுர அடிக்கு ரூ.25 வாடகை நிர்ணயம்
/
மீன் கடைக்கு சதுர அடிக்கு ரூ.25 வாடகை நிர்ணயம்
ADDED : ஜன 03, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, ஜோதி அம்மாள் நகரில், 7,658.9 சதுர மீட்டர் அளவில், 82 மீன் அங்காடிகள், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கடையும், 25 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, மாத வாடகை, சதுர அடிக்கு 25 ரூபாய் என, மாநகராட்சி நிர்ணயித்துள்ளது.
அதன்படி, ஒரு கடைக்கு மாத வாடகையாக மாதம், 625 ரூபாய் வசூலிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. இப்பணிகள் முடிவடைந்த பின், பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.