/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரே வீட்டில் அடிக்கடி புகுந்து திருடியோர் சிக்கினர்
/
ஒரே வீட்டில் அடிக்கடி புகுந்து திருடியோர் சிக்கினர்
ஒரே வீட்டில் அடிக்கடி புகுந்து திருடியோர் சிக்கினர்
ஒரே வீட்டில் அடிக்கடி புகுந்து திருடியோர் சிக்கினர்
ADDED : நவ 26, 2025 03:09 AM
கோயம்பேடு: கோயம்பேடு, அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ரவி, 40; வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது வீட்டின் விண்டோ 'ஏசி' யை கழற்றி, அவ்வழியாக நுழைந்து மர்ம நபர்கள் இருவர் திருட முயன்றனர்.
பகுதிமக்கள் இருவரையும் பிடித்து, கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ரவியின் வீடு நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு இருந்ததால், அவ்வப்போது, வீட்டில் புகுந்து 'டிவி, ஏசி' உள்ளிட்ட மின் பொருட்களை திருடி விற்றதும், மது அருந்தி வந்ததும் தெரிய வந்தது. சிக்கிய இருவர் உட்பட நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், கோயம்பேடு சந்தை பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, 27, அருள், 27, ரவி, 40, சிவலிங்கேஸ்வர், 36 என்பது தெரிய வந்தது.