ADDED : டிச 07, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி, மணலி மண்டலம், 22வது வார்டு, சின்னசேக்காடு - கக்கன்புரம் பகுதியில், நுாற்றாண்டு பழமைவாய்ந்த ஆலமரம் நின்றது. கடந்த வாரம் வீசிய 'பெஞ்சல்' புயல் காரணமாக, ஆலமரம் கீழே சரிந்தது. இதனால், பகுதிவாசிகள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, மணலி தி.மு.க., மண்டல குழு தலைவர் ஆறுமுகம், 22வது காங்., கவுன்சிலர் தீர்த்தி, பூங்கா துறை கண்காணிப்பாளர் சுதா, மேற்பார்வையாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் அடங்கிய குழு, மரத்தை மறு நடவு செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி, நேற்று, இரு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், 40 அடி உயரமுள்ள ஆலமரத்தை, அதே இடத்தில் துாக்கி நிறுத்தி மறு நடவு செய்தனர். இது பகுதிவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.