/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பால ரயில், மெட்ரோவை இணைக்க ரயில்வேயிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
/
மேம்பால ரயில், மெட்ரோவை இணைக்க ரயில்வேயிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
மேம்பால ரயில், மெட்ரோவை இணைக்க ரயில்வேயிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
மேம்பால ரயில், மெட்ரோவை இணைக்க ரயில்வேயிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
ADDED : பிப் 10, 2025 03:58 AM
சென்னை:சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை, தற்போது தினமும் 100 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வேளச்சேரியையும் பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப்பணி, கடந்த 2008ல் துவங்கப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த பணிகள், தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இதையடுத்து, வேளச்சேரி மேம்பால தடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் விரைவில் இணைக்கப்பட உள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
வேளச்சேரி மேம்பால ரயில் பாதையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவை, ரயில்வே துறை ஏற்றுக் கொண்டுள்ளது.
பரங்கிமலை - வேளச்சேரி இணைப்பு பணிகள், அடுத்த இரண்டு மாதங்களில் முடித்து, பறக்கும் ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்.
வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை, மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான செலவு, நிதி, ரயில்கள் இயக்கம், நிலம், சொத்து மதிப்பு, வருவாய் பங்கீடு உள்ளிட்டவை குறித்து, வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.
இதற்கான ஒப்புதலை, வாரியம் விரைவில் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின், இந்த தடம் முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
இதையடுத்து, மெட்ரோ ரயில் நிறுவனம், 'ஏசி' வசதியுடன் கூடிய ரயில்கள், ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.