தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நடைபாதையில் தி.மு.க., பேனர் முதல்வர் கண்டிக்க வேண்டுகோள்

நடைபாதையில் தி.மு.க., பேனர் முதல்வர் கண்டிக்க வேண்டுகோள்

நடைபாதையில் தி.மு.க., பேனர் முதல்வர் கண்டிக்க வேண்டுகோள்


ADDED : மார் 06, 2024 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.நகர்,தி.நகர், ஜி.என்., செட்டி சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து, தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால், பாதசாரிகள் விபத்து அபாயத்துடன் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும் விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என, நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது.

ஆனாலும், நகரில் அரசியல் மற்றும் தனியார் நிறுவன விளம்பரங்களுக்கு பஞ்சமில்லை. அவற்றைக் கட்டுப்படுத்துவதும் பெரும் சவாலாக உள்ளது.

தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல கட்சிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தி, பேனர்கள் வைத்து வருகின்றனர்.

மாநகராட்சி சார்பில்,'நடைபாதை நடப்பதற்கே' என, பல இடங்களில் உள்ள நடைபாதைகளில் அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தாலும், நிலைமை வேறாக உள்ளது.

இதில், தி.நகர் ஜி.என்., செட்டி சாலையில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து, தி.மு.க., சார்பில் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. பிறந்தநாள் முடிந்து ஐந்து நாட்கள் கடந்தும், இன்னும் இந்த பேனர்கள் அகற்றப்படவில்லை.

இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. நெரிசல் மிகுந்த சாலை என்பதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, நடைபாதை மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கட்சியினர் விளம்பர பலகைகள் வைப்பதை, முதல்வர் கண்டிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us