/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடுக்குமாடி அருகே தேங்கும் கழிவுநீர் நிரந்தர தீர்வு காண வேண்டுகோள்
/
அடுக்குமாடி அருகே தேங்கும் கழிவுநீர் நிரந்தர தீர்வு காண வேண்டுகோள்
அடுக்குமாடி அருகே தேங்கும் கழிவுநீர் நிரந்தர தீர்வு காண வேண்டுகோள்
அடுக்குமாடி அருகே தேங்கும் கழிவுநீர் நிரந்தர தீர்வு காண வேண்டுகோள்
ADDED : அக் 14, 2024 03:06 AM

விருகம்பாக்கம்:கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம் 128வது வார்டில், ஆற்காடு சாலையில் வி.ஆர்.சுந்தர மூர்த்தி தெரு அமைந்துள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இதே தெருவில், மோகனா அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, தனி குழாய் அமைக்கப்பட்டிருந்தது.
குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், வி.ஆர்.சுந்தர மூர்த்தி தெருவிலுள்ள பாதாள சாக்கடை குழாயில், அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் குழாயை, மெட்ரோ ரயில் ஒப்பந்த ஊழியர்கள் இணைத்துள்ளனர்.
வி.ஆர்.சுந்தர மூர்த்தி தெருவிலுள்ள பாதாள சாக்கடை குழாயின் கொள்ளளவை விட, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அதிக கழிவுநீர் வருவதால், கடந்த ஒரு மாதமாக தெருவில் கழிவுநீர் குளம் போல் தேங்கி வருகிறது.
அப்பகுதிவாசிகள் தங்கள் வீட்டு கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கிய கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதால், வீட்டின் கதவை திறக்க முடியவில்லை என வேதனைப்படுகின்றனர்.
மேலும், வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால், அவர்களை தெருவின் நுழைவாயில் அருகே நிற்கும்படி கூறிவிட்டு, 'பைக்'கில் சென்று அழைத்து வரும் நிலை உள்ளது. எனவே, அடுக்குமாடி குடியிருப்பிற்கு தனி கழிவுநீர் குழாய் அமைக்க, குடிநீர் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.சீனிவாசன், 47, என்பவர் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் குழாயை, எங்களுக்கு தெரியாமல் மெட்ரோ ரயில் பணி செய்யும் நபர்கள், எங்கள் தெரு பாதாள சாக்கடையுடன் இணைத்துள்ளனர்.
அன்றிலிருந்து தொடர்ந்து எங்கள் தெருவில், கழிவுநீர் தேங்கி வருகிறது. வீடுகள் தாழ்வாக உள்ளதால், வீட்டில் கழிவுநீர் புகுந்து விடுகிறது.
குடிநீர் வாரியத்திடம் புகார் அளித்தால், கழிவுநீர் லாரி வாயிலாக தேங்கும் கழிவுநீரை அகற்றி விடுகின்றனர். ஆனால், நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.