/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
32 இடங்களில் நில வகைப்பாடு மாற்றுவதற்கு கருத்து கேட்பு
/
32 இடங்களில் நில வகைப்பாடு மாற்றுவதற்கு கருத்து கேட்பு
32 இடங்களில் நில வகைப்பாடு மாற்றுவதற்கு கருத்து கேட்பு
32 இடங்களில் நில வகைப்பாடு மாற்றுவதற்கு கருத்து கேட்பு
ADDED : டிச 17, 2025 05:24 AM
சென்னை: சென்னை பெருநகரில், தனியார் கோரிக்கைகள் அடிப்படையில், 32 இடங்களில் நில வகைப்பாடு மாற்றுவது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட குழுமமான சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
சென்னை பெருநகரில், இரண்டாவது முழுமை திட்டம் அடிப்படையில், சர்வே எண் வாரியாக, நில வகைப்பாடு வரையறுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ங்களில், பூந்தமல்லி, குன்றத்துார், செம்பரம்பாக்கம், அகரம் தென், வண்டலுார், மயிலாப்பூர், கோடம்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து, நில வகைப்பாடு மா ற்ற விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்த விண்ணப்பங்கள் மீது, பொதுமக்கள் தங்கள் கருத்து தெரிவித்த பின்னரே, தொழில்நுட்ப கமிட்டியின் ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. பின், இக்கமிட்டியின் பரிந்துரையில் நில வகைப்பாடு மாற்றப்படுகிறது.
தற்போது, 32 விண்ணப்பங்கள் குறித்த விபரங்களை சி.எம்.டி.ஏ., https://www.cmdachennai.gov.in/ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதில், 19 இடங்களில் விவசாய நிலங்கள் வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற கோரிக்கை வந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை, அடுத்த 21 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

