/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குன்றத்துார் காப்பு காடுகளில் நாட்டு மரங்கள் நட கோரிக்கை
/
குன்றத்துார் காப்பு காடுகளில் நாட்டு மரங்கள் நட கோரிக்கை
குன்றத்துார் காப்பு காடுகளில் நாட்டு மரங்கள் நட கோரிக்கை
குன்றத்துார் காப்பு காடுகளில் நாட்டு மரங்கள் நட கோரிக்கை
ADDED : நவ 05, 2024 12:42 AM
குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் வன சரக கட்டுப்பாட்டில், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் தாலுகாக்களில், 4,500 ஏக்கர் பரப்பளவில் காப்பு காடு உள்ளது.
இங்கு யூகலிப்டஸ், நாவல், முந்திரி, மூங்கில் மற்றும் ஏராளமான காட்டு வகை மரங்கள் உள்ளன. நரி, முயல், உடும்பு, காட்டுபன்றி, முள்ளம்பன்றி, காட்டுபூனை உள்ளிட்ட விலங்குகளும், ஏராளமான பறவை இனங்களும் வாழ்கின்றன.
தொழிற்சாலை பெருக்கத்தால் ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் சுற்றுபுறத்தில் மரங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, சுற்றுச்சூழலை மேம்படுத்த, தற்போதுள்ள காப்பு காட்டில், அதிக மரங்களை நடவு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதுார் வனச்சரக கட்டுப்பாட்டில், குன்றத்துார் அருகே நல்லுார், பூந்தண்டலம், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், எருமையூர், நடுவீரப்பட்டு, சோமங்கலம் ஆகிய பகுதியில் அடங்கிய, 900 ஏக்கர் பரப்பளவில் காப்பு காடு உள்ளது.
இந்த காப்பு காடு முழுதும், 50 ஆண்டுகளுக்குமுன், முந்திரி மரங்கள் நடப்பட்டன.
இந்த மரங்கள் தற்போது பட்டு போய் விளைச்சல் தருவதில்லை. எனவே, முந்திரி மரங்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த நாட்டு வகை மரங்களை அதிகம் நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'முந்திரி மரங்கள் பட்டுபோய் மகசூல் கொடுப்பதில்லை. மாற்று மரங்கள் நடவு செய்யலாம் என, அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.