/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சித்தேரி நீர்வரத்து கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
/
சித்தேரி நீர்வரத்து கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
சித்தேரி நீர்வரத்து கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
சித்தேரி நீர்வரத்து கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 23, 2024 06:22 AM

மேடவாக்கம் : மேடவாக்கம் சித்தேரி நீர்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேறும் கால்வாய் புதர்மண்டி, ஆகாயத்தாமரை செடி சூழ்ந்துள்ளதால், மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
மேடவாக்கம் பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், போக்கு கால்வாய் வழியாக சித்தேரியை வந்தடைகிறது. இதிலிருந்து வெளியேறும் உபரிநீர், பள்ளிக்கரணை ஏரியை சென்றடைகிறது. சித்தேரியின் நீர்வரத்து பாதையும், நீர் வெளியேறும் பாதையும் புதர்மண்டி, பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. தவிர, ஏரி முழுதும் ஆகாயத் தாமரைகளால் நிரம்பி உள்ளன.
கடந்த 1990 வரை, சித்தேரியிலிருந்து குடங்களில் நீர் பிடித்து, அதையே இப்பகுதி மக்கள் சமையலுக்கு பயன்படுத்தினர்.
அவ்வளவு துாய்மையான தண்ணீர் தற்போது, கழிவுநீர் கலந்து, சாக்கடையாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது. தவிர, செடி, கொடி, மரங்கள் முளைத்து, ஆகாயத்தாமரை நிறைந்து, புதர் மண்டி, அழிவின் விளிம்பில் உள்ளது.
எனவே, சித்தேரியை சீரமைக்கவும், ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள நிலப் பரப்பை மீட்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர, ஏரியின் நான்கு பக்கங்களிலும் சுற்று சுவர் எழுப்பி, கரைகளை பலப்படுத்தி, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும்.
இவ்வாறு, பகுதிமக்கள் புகார் எழுப்பிஉள்ளனர்.