தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாழங்குப்பம் கடற்கரையை அழகுபடுத்த கோரிக்கை

தாழங்குப்பம் கடற்கரையை அழகுபடுத்த கோரிக்கை

தாழங்குப்பம் கடற்கரையை அழகுபடுத்த கோரிக்கை


ADDED : ஜன 24, 2025 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 12:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எண்ணுார், திருவொற்றியூர் மண்டலம், எண்ணுார் - தாழங்குப்பம் கடற்கரை பரந்து விரிந்த மணல் பரப்பை கொண்டுள்ளது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து, குடும்பத்துடன் பொழுதை போக்கி செல்வர்.

இதன் காரணமாக, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட சிற்றுண்டி கடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தவிர, அப்பகுதியில் இளைஞர்கள், கால்பந்து, கைப்பந்து விளையாட்டு பயிற்சி, உடற்பயிற்சி செய்கின்றனர். எனவே, தாழங்குப்பம் கடற்கரையை மெரினா போல் அழகுப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், வடசென்னை மக்கள் பயன்பெறுவர். மேலும், மெரினா சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்புள்ளது.

அதிகாரிகள் கவனித்து, வடசென்னை திட்டத்தின் கீழ், எண்ணுார் - தாழங்குப்பம் கடற்கரையை அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us