/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மோசமான தி.நகர் உஸ்மான் சாலை ஒட்டுப்பணி மேற்கொள்ள கோரிக்கை
/
மோசமான தி.நகர் உஸ்மான் சாலை ஒட்டுப்பணி மேற்கொள்ள கோரிக்கை
மோசமான தி.நகர் உஸ்மான் சாலை ஒட்டுப்பணி மேற்கொள்ள கோரிக்கை
மோசமான தி.நகர் உஸ்மான் சாலை ஒட்டுப்பணி மேற்கொள்ள கோரிக்கை
ADDED : நவ 11, 2024 01:27 AM

தி.நகர்:மழை மற்றும் மேம்பால பணியால் குண்டும் குழியுமான தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில், சாலை ஒட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகரின் பிரதான சாலைகளில் ஒன்றாக, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை உள்ளது. இச்சாலை அண்ணா சாலை மற்றும் தி.நகர், கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது.
இச்சாலையில் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படுவதால், 131 கோடி ரூபாய் மதிப்பில் இரும்பு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையில் சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது.
இதில், தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே செல்லும் பகுதி படுமோசமாக உள்ளது. இதனால், பேருந்துகள் திரும்பிச் செல்ல தாமதம் ஏற்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேம்பால பணிகள் முடிந்த பின், புது சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்கு முன், குண்டும் குழியுமாக உள்ள சாலையில், வாகன போக்குவரத்திற்கு ஏதுவாக, சாலை ஒட்டுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.