/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநீர்மலை சாலையில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
திருநீர்மலை சாலையில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 24, 2025 12:07 AM
குரோம்பேட்டை, பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் பான்ட்ஸ் சிக்னலில் இருந்து பிரிந்து செல்கிறது திருநீர்மலை சாலை. நாகல்கேணி, லட்சுமி புரம், திருநீர்மலை, திருமுடிவாக்கம் வழியாக வெளிவட்ட சாலையை இணைப்பதால், தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
அரசு பேருந்து மற்றும் நாகல்கேணி தோல் தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள், லாரி, வேன் என, அதிக வாகனங்கள் செல்கின்றன. மேலும், இதன் வழியாக பல்லாவரம்- பழந்தண்டலம் இடையே பிராட்வே- பழந்தண்டலம் இடையே துர்கா நகர்- திருமுடிவாக்கம் இடையே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருநீர்மலை சாலை சந்திப்பு, நாகல்கேணி, லட்சுமிபுரம்-சரஸ்வதிபுரம் சந்திப்பு, சுப்புராயன் நகர் ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் இந்த பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பயணியர் வசதிக்காக, இந்த இடங்களில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியரிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

