/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது இடத்தில் புகை பிடித்தல் கட்டுப்படுத்த கோரிக்கை
/
பொது இடத்தில் புகை பிடித்தல் கட்டுப்படுத்த கோரிக்கை
பொது இடத்தில் புகை பிடித்தல் கட்டுப்படுத்த கோரிக்கை
பொது இடத்தில் புகை பிடித்தல் கட்டுப்படுத்த கோரிக்கை
ADDED : நவ 15, 2024 12:24 AM
பூந்தமல்லி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்து நிலையம், டீ கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சிகரெட் புகைப்பது அதிகரித்துள்ளது. இதை தடுக்க, அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில், பொது இடங்களில் சிகரெட் புகைப்பது, தற்போது அதிகரித்து வருகிறது. சிகரெட் புகைப்போர் வாயிலாக, சிகரெட் புகைக்காதவர்களுக்கு சுவாச பிரச்னை, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது காவல் துறை, சுகாதார துறை, உள்ளாட்சி துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொது இடத்தில் சிகரெட் புகைக்க, 2008 அக்., 2ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி பொது இடத்தில் சிகரெட் புகை பிடிப்பவர்களுக்கு, 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால், பொது இடத்தில் சிகிரெட் பிடிப்பது வெகுவாக குறைந்தது. தற்போது இந்த உத்தரவு, காற்றில் பறந்துவிட்டது. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பொது இடங்களில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பூந்தமல்லி உள்ளிட்ட சென்னை புறநகரில் உள்ள பேருந்து நிலையம், டீ கடையில் புகை பிடிப்பது மிக அதிகமாக உள்ளதால், அங்கு நிற்கவே முடியவில்லை.
எனவே, பொது இடத்தில் புகை பிடிப்பவர்கள் மீது அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.