/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லியில் வறண்ட கோவில் குளம் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த கோரிக்கை
/
பூந்தமல்லியில் வறண்ட கோவில் குளம் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த கோரிக்கை
பூந்தமல்லியில் வறண்ட கோவில் குளம் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த கோரிக்கை
பூந்தமல்லியில் வறண்ட கோவில் குளம் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த கோரிக்கை
ADDED : செப் 26, 2024 12:26 AM

பூந்தமல்லிபூந்தமல்லியில், வைணவ மகான் ராமானுஜரின் குருவான, திருக்கச்சி நம்பிகளின் அவதார தலமான வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள பெருமாளும், ஒரு சேர இக்கோவிலில் காட்சியளிக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டு பழமையான இந்த கோவிலுக்கு எதிரே தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தின் நீர்வரத்து கால்வாய்களில் கழிவுநீர் கலந்ததால் மூடப்பட்டன. காலப்போக்கில் கால்வாய்கள் துார்ந்து போய்விட்டன.
இதனால், இந்த குளத்திற்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது. பக்தர்களும் குளத்தில் நீராட முடியாத நிலை உள்ளது. தண்ணீர் இல்லாததால் குளத்தில் நடந்த வழிபாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:
கோவிலை சுற்றி குடியிருப்புகள், வணிக கடைகள் அதிகம் உள்ளன. அருகில் உள்ள கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி, நீரை குளத்தில் கொண்டு வந்து தேங்கி வைக்க வேண்டும்.
இந்த குளத்தில் தண்ணீர் தேங்கினால், பக்தர்களும் நீராட முடியும், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.
எனவே, குளத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த ஹிந்து அறநிலையத்துறை மற்றும் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.