/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிராட்வே - கொசப்பூர் '64டி' பேருந்து பெரியார் நகருக்கு நீட்டிக்க கோரிக்கை

ADDED : ஆக 26, 2025 08:18 AM
மணலி: பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து, தடம் எண்: '64டி' மாநகர பேருந்து, சென்ட்ரல், டவுட்டன், பட்டாளம், மூலக்கடை, மாதவரம் பால்பண்ணை, பெரிய மாத்துார், கொசப்பூர் வரை, இயக்கப்படுகிறது.
இந்த பேருந்து சேவை, 1990ம் ஆண்டு முதல், பெரியார் நகர் வரை இயக்கப்பட்டது. 2011ம் ஆண்டிற்கு பின், கொசப்பூருடன் நிறுத்தப்பட்டு விட்டது.
இதனால், கொசப்பூரை ஒட்டியிருக்கும், தியாகி விஸ்வநாத தாஸ் நகர், காந்தி நகர், தீயம்பாக்கம், சென்றம் பாக்கம், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 2,000 குடும்பத்தினர், கொசப்பூருக்கு தனி வாகனங்கள் மூலம் வர வேண்டியுள்ளது.
எனவே, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், தடம் எண்: 64டி மாநகர பேருந்து சேவையை, பெரியார் நகர் வரை நீட்டிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.