/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிராட்வே - முகலிவாக்கம் பஸ் சேவை மதனந்தபுரத்திற்கு நீட்டிக்க கோரிக்கை
/
பிராட்வே - முகலிவாக்கம் பஸ் சேவை மதனந்தபுரத்திற்கு நீட்டிக்க கோரிக்கை
பிராட்வே - முகலிவாக்கம் பஸ் சேவை மதனந்தபுரத்திற்கு நீட்டிக்க கோரிக்கை
பிராட்வே - முகலிவாக்கம் பஸ் சேவை மதனந்தபுரத்திற்கு நீட்டிக்க கோரிக்கை
ADDED : ஜன 17, 2025 12:22 AM
முகலிவாக்கம், ஆலந்துார் மண்டலம் முகலிவாக்கம் அடுத்துள்ளது மதனந்தபுரம். இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், போதிய பேருந்து வசதியில்லை.
அதேநேரம், பிராட்வேயில் இருந்து முகலிவாக்கத்திற்கு '26எம்' மாநகர பேருந்து, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல், எல்.ஐ.சி., ஜெமினி, பாம்குரோவ், லிபர்ட்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர் வழியாக இயக்கப்படுகிறது.
மேலும், பிராட்வேயில் இருந்து, '26ஆர்' மாநகர பேருந்து, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல், எல்.ஐ.சி., ஜெமினி, வடபழனி, விருகம்பாக்கம், கலைஞர் நகர் மேற்கு, ராயலா நகர், டி.எல்.எப்., வழியாக முகலிவாக்கம் இயக்கப்படுகிறது.
அதேபோல, 45பி.எக்ஸ்., மாநகர பேருந்து திருவல்லிக்கேணி, ரத்னா கபே, விவேகானந்தர் இல்லம், ராணி மேரி கல்லுாரி, லஸ், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, கத்திபாரா, நந்தம்பாக்கம் வழியாக இயக்கப்படுகிறது.
இந்த பேருந்துகள் முகலிவாக்கம் அரசமரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அவை மதனந்தபுரம் வரை விரிவாக்கம் செய்து இயக்கினால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், பணிக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகர போக்குவரத்து கழகத்தினர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.