/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசார் பற்றாக்குறை காலி பணியிடம் நிரப்ப கோரிக்கை
/
போலீசார் பற்றாக்குறை காலி பணியிடம் நிரப்ப கோரிக்கை
போலீசார் பற்றாக்குறை காலி பணியிடம் நிரப்ப கோரிக்கை
போலீசார் பற்றாக்குறை காலி பணியிடம் நிரப்ப கோரிக்கை
ADDED : மே 06, 2025 01:02 AM
முகப்பேர், திருமங்கலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில், ஒரு மாதத்திற்கும் மேலாக குற்றப்பிரிவு ஆய்வாளர் இடம் காலியாக உள்ளது. சட்டம் - ஒழுங்கு ஆய்வாளரே, குற்றப்பிரிவுக்கும் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால், திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்கு சம்பந்தமாக புகார் அளிக்க வரும் பொதுமக்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு, வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல, நொளம்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், பணியில் உள்ள போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை, நீதிமன்ற பணிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிப்பது போன்ற பணிகளை சரிவர மேற்கொள்ள, 24 போலீசார் பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், நொளம்பூர் குற்றப்பிரிவில், 12 பேர் மட்டுமே பணியில் இருப்பதாக தெரிகிறது.
இதனால், பணிச்சுமையோடு விடுப்பு எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், போலீசார் மன உளைச்சலில் உள்ளதாக தெரிகிறது. எனவே, காவல் துறை உயரதிகாரிகள், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, புகார் அளிக்க வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

