/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரியபாளையம் - ஆரணி தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
/
பெரியபாளையம் - ஆரணி தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
பெரியபாளையம் - ஆரணி தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
பெரியபாளையம் - ஆரணி தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
ADDED : பிப் 23, 2024 11:55 PM
ஆவடி, ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து, பெரியபாளையம் வழியாக ஆரணிக்கு, தடம் எண்: 580 எக்ஸ் அரசு பேருந்து இயக்கப்படுகிறது. தினமும் எட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில், மகளிருக்கு என, இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு பேருந்து காலையில் நான்கு; மாலையில் நான்கு எட்டு சர்வீஸ் இயக்கப்படுகிறது.
கொரோனா காலக்கட்டத்திற்கு முன், கால் மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என, ஒவ்வொரு நிறுத்தத்தையும் பேருந்துகள் கடந்து சென்றன.
ஆனால், தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என வருகிறது. வார விடுமுறை, அரசு விடுமுறை உள்ளிட்ட பல நாட்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து வருகிறது. இதனால், பயணியர் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, பட்டாபிராம் பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடப்பதால், அனைத்து பேருந்துகளும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
பட்டாபிராம் - - தண்டுரை வழியாக, தாம்பரம் வெளிவட்டச் சாலையில் வலதுபுறம் திரும்பி, நெமிலிச்சேரி திருவள்ளூர், பாக்கம், பெரியபாளையம் வழியாக ஆரணி செல்கிறது.
இதனால், பேருந்துகள் சென்று வருவதற்குள் மேலும் காலதாமதாகி விடுகிறது.
இந்த வழித்தடத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியர் உட்பட, 2,000க்கும் மேற்பட்டோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக, 'பீக் ஹவர்ஸ்' வேளைகளில் போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவ - மாணவியர் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் நிலைமை உள்ளது.
எனவே, மக்கள் நலனை கருத்தில் வைத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 'பீக் ஹவர்ஸ்' வேளைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.