தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இ.எஸ்.ஐ.,யில் 'பேட்டரி' வாகனங்கள் இயக்க கோரிக்கை

 இ.எஸ்.ஐ.,யில் 'பேட்டரி' வாகனங்கள் இயக்க கோரிக்கை

 இ.எஸ்.ஐ.,யில் 'பேட்டரி' வாகனங்கள் இயக்க கோரிக்கை


ADDED : பிப் 11, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அயனாவரம்: அயனாவரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் 'பேட்டரி' வாகன வசதி இல்லாததால், நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

அயனாவரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், தினமும் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த மருத்துவமனையில், வெளிநோயாளிகள் பிரிவு, பரிசோதனை அறைகள், மருந்தகம் ஆகியவற்றுக்கு செல்ல நீண்ட துாரம் நடக்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டோரை ஏற்றி செல்லும் 'பேட்டரி' வாகன வசதி இல்லாததால், அவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதுகுறித்து, மூத்த குடிமகன் கலீல் நிஷார் அகமத் 70 கூறியதாவது:

வாரத்தில் இருமுறை சிகிச்சைக்காக இங்கு வருகிறேன். 'பேட்டரி' வாகன வசதி இல்லாததால், அதிக துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

கே.கே.நகர்., இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வாகனங்கள் வசதி இல்லை. மக்கள் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us