தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற கோரிக்கை

பள்ளி அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற கோரிக்கை

பள்ளி அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற கோரிக்கை


ADDED : ஆக 16, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவிலம்பாக்கம்: பள்ளி அருகே செயல்படும், ‘டாஸ்மாக்’ மதுக்கடையை அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேடவாக்கம் – கோவிலம்பாக்கம் பிரதான சாலையில், பவானி திருமண மண்டபம் அருகே ‘டாஸ்மாக்’ மதுபானக்கடை அமைந்துள்ளது.

இதனருகே, 100 மீட்டர் தொலைவிற்குள் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் 2,000க்கும் மேற்பட்ட மாணவ- – மாணவியர், பெண்கள் மற்றும் பொதுமக்கள், இந்த வழியாக தான் சென்று வருகின்றனர்.

இங்கு மது அருந்த வருவோரால், பள்ளி மாணவ – மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பொது அமைதியைக் கருத்தில் வைத்து, இக்கடையை அப்பகுதியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us