/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்வே ஸ்டேஷன் சாலை சீரமைக்க வேண்டுகோள்
/
ரயில்வே ஸ்டேஷன் சாலை சீரமைக்க வேண்டுகோள்
ADDED : பிப் 06, 2024 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார்- - ஆதம்பாக்கத்தை இணைக்கும் ரயில்வே ஸ்டேஷன் சாலை, பிரதான சாலைகளில் ஒன்றாக உள்ளது.
இச்சாலையில் தினம் பல்லாயிரக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. ஆனால், இச்சாலை தரமானதாக அமைக்கப்படவில்லை.
ஜி.எஸ்.டி.,யில் பிரிந்து ஆலந்துார் சுரங்கப்பாலம் வரை செல்லும் சாலையில், ஆங்காங்கே பல்லாங்குழிகள் காட்சியளிக்கின்றன.
சில இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கின்றன. அதன் மீது செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து, தினமும் விபத்தை சந்தித்து வருகின்றனர். உயிரிழப்பு அசம்பாவிதம் நடக்கும் முன், இச்சாலையை சீரமைக்க வேண்டும்.
- மயில்வாகனன், ஆலந்துார்