/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பலவீனமான போரூர் ஏரி கரை துார்வாரி பலப்படுத்த கோரிக்கை
/
பலவீனமான போரூர் ஏரி கரை துார்வாரி பலப்படுத்த கோரிக்கை
பலவீனமான போரூர் ஏரி கரை துார்வாரி பலப்படுத்த கோரிக்கை
பலவீனமான போரூர் ஏரி கரை துார்வாரி பலப்படுத்த கோரிக்கை
ADDED : ஜன 09, 2024 12:44 AM

போரூர்,போரூர் மவுன்ட் -பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே, பலவீனமாக உள்ள போரூர் ஏரி கரையை பலப்படுத்த வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னைக்கு மிக அருகில், மாநகராட்சி எல்லையில் போரூர் ஏரி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, 46 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து, 70 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில், இந்த ஏரி துார் வாரி ஆழப்படுத்தப்பட்டது.
மேலும், 2017ம் ஆண்டு இந்த ஏரிக்கரையில், 1.85 கோடி ரூபாய் செலவில், தற்காலிக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் தினசரி, 40 லட்சம் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சமீபமாக பெய்து வரும் மழையால், போரூர் ஏரி நிரம்பி உள்ளது. இதனால், போரூர் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே கரை நிரம்பியது.
இதையடுத்து, மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டது. தற்போது, அதன் அருகே மெட்ரோ பணிகள் நடந்து வருதால், இரும்பு தடுப்புகளால் மறைக்கப்பட்டுள்ளது.
எனவே, அடுத்த மழைக் காலத்திற்கு முன், ஏரி கரையை பலப்படுத்துவதுடன், ஏரியில் துார் வாரப்படாமல் உள்ள பகுதிகளையும் துார் வாரி ஆழப்படுத்த வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.