/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குளக்கரை பிரதான சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
/
குளக்கரை பிரதான சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
ADDED : ஏப் 17, 2025 11:55 PM

ஆவடி,
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், குளக்கரை சாலை 2 கி.மீ., துாரம், 40 அடி அகலம் உடையது.
இந்த சாலையை ஒட்டி மாசிலாமணீஸ்வரர் நகர், எட்டியம்மன் நகர், வெங்கடாசலம் நகர், கமலம் நகர் மற்றும் லலிதாம்பாள் நகர் பகுதிகளில் 5,000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குளக்கரை சாலை முதல் வெங்கடாச்சலம் நகர் வரை, 300க்கும் மேற்பட்ட சிறு குறு வணிக நிறுவனங்கள் உள்ளன.
வெங்கடாசலம் நகரில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் சிட்கோ மகளிர் தொழில் பூங்கா இருப்பதால், தினமும் 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், தண்ணீர் லாரி, அரசு பேருந்து மற்றும் இதர வாகனங்கள் என, 50 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த குளக்கரை சாலையில், 60க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்புகள் உள்ளன. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. பல இடங்களில் அக்கிரமிப்புகளால் சாலை சுருங்கி உள்ளது. இதனால், வாகனங்கள் சென்று வருவது சிரமமாக உள்ளது.
'பீக் ஹவர்' நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள், சாலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.