/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.4 கோடி திமிங்கல எச்சம் கடத்திய 3 பேருக்கு காப்பு
/
ரூ.4 கோடி திமிங்கல எச்சம் கடத்திய 3 பேருக்கு காப்பு
ரூ.4 கோடி திமிங்கல எச்சம் கடத்திய 3 பேருக்கு காப்பு
ரூ.4 கோடி திமிங்கல எச்சம் கடத்திய 3 பேருக்கு காப்பு
ADDED : ஏப் 03, 2025 11:56 PM
சென்னை,
கடல் திமிங்கலங்களின் செரிமான உறுப்பில் இருந்து வாய் வழியாக வெளியேற்றும் எச்சம், அம்பர்கிரீஸ் என அழைக்கப்படுகிறது. இது, மருந்து வகைகள், வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இதை வைத்திருப்பது, வனத்துறை சட்டபடி குற்றம். கிண்டி, ஈக்காட்டுதாங்கல் பகுதியில், சட்டவிரோதமாக திமிங்கல எச்சம் கடத்தி விற்பதாக, வேளச்சேரி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
நேற்று மாலை, மயிலாப்பூரை சேர்ந்த கணேசன், 35, ஆறுமுகம், 67, செந்தில்குமார், 54, ஆகியோரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4 கிலோ 161 கிராம் எடை கொண்ட திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களை, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, இந்த எச்சம் எங்கிருந்து கடத்தப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர் என, தீவிர விசாரணை நடத்துகின்றனர். தலைமறைவான ஸ்ரீதரன் என்பவரை, போலீசார் தேடுகின்றனர்.