ADDED : பிப் 17, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைந்தகரை,மதுரையைச் சேர்ந்தவர் நிகாஷ், 20. இவர், அமைந்தகரையில் நண்பர்களுடன் தங்கி, 'லேப் டெக்னீஷியன்' முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம், அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலை கூவம் அருகில், நண்பருடன் நடந்து சென்றார்.
அப்போது, அவ்வழியாக வந்த நபர் ஒருவர், நிகாஷை மிரட்டி, 300 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்து, பணம் பறிப்பில் ஈடுபட்ட குன்றத்துாரைச் சேர்ந்த நித்தியராஜ், 47, என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே, கொலை வழக்கு உள்ளது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.