/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியர் மீட்பு
/
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியர் மீட்பு
ADDED : அக் 28, 2025 01:13 AM
பாண்டி பஜார்:: அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தியதை பெறறோர் கண்டித்ததால்: தி.நகர் தர்மாபுரத்தை சேர்ந்த, 14 மற்றும் 15 வயது சிறுமியர் இருவரும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற தோழிகளான இருவரும், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, சிறுமியரின் பெற்றோர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், சிறுமியர் இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுமியரை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால், வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது.

