/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேரளாவுக்கு கடத்திய மாடுகள் மீட்பு
/
கேரளாவுக்கு கடத்திய மாடுகள் மீட்பு
ADDED : பிப் 19, 2024 02:08 AM
பூந்தமல்லி:ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை பூந்தமல்லி வழியாக கேரளாவிற்கு லாரியில் பசு மாடுகள் கடத்தப்பட்டன.
தகவல் அறிந்த நசரத்பேட்டை போலீசார், நேற்று முன்தினம், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சோதனைச் சாவடியில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, 32 பசுமாடுகள் இருந்தது தெரிந்தது.
விசாரணையில், அவர்கள் கேரளாவைச் சேர்ந்த டோனி, 35, அலி ஆஸ்கர், 32, கர்நாடகாவைச் சேர்ந்த மோகன் குமார், 23, மற்றும் தர்னேஷ், 34, என்பதும், சட்ட விரோதமாக பசுமாடுகள் கடத்தப்பட்டதும் தெரிய வந்தது.
அவற்றை மீட்ட நசரத்பேட்டை போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூரில் உள்ள ராஜாராம் பண்ணைக்கு, பராமரிப்பதற்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

