/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்பதிவு லாரி குடிநீர் விலை உயர்வு
/
முன்பதிவு லாரி குடிநீர் விலை உயர்வு
UPDATED : டிச 06, 2025 05:14 AM
ADDED : டிச 06, 2025 05:13 AM

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு, முன்பதிவு செய்து பெறப்படும் குடிநீர் லாரி நீரின் விலையை, சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியில், தினசரி 106 கோடி லிட்டர் குடிநீரை, சென்னை குடிநீர் வாரியம், குழாய் வாயிலாக வினியோகித்து வருகிறது.
இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு தேவைப்படுவோர், முன்பதிவு செய்து கட்டண அடிப்படையில் குடிநீரை வாங்கி வருகின்றனர்.
அவர்களுக்கு தினமும், 1,000 லாரிகளில் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, முன்பதிவு லாரி தண்ணீரின் விலையை, சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தி உள்ளது.
அதன்படி, 6,000 மற்றும் 9,000 லிட்டர் லாரி தண்ணீரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், 12,000, 18,000 லிட்டர் லாரி குடிநீரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
![]() |


