/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரிசர்வ் வங்கி, சேலஞ்சர்ஸ் அணி ஹாக்கி அரையிறுதிக்கு தகுதி
/
ரிசர்வ் வங்கி, சேலஞ்சர்ஸ் அணி ஹாக்கி அரையிறுதிக்கு தகுதி
ரிசர்வ் வங்கி, சேலஞ்சர்ஸ் அணி ஹாக்கி அரையிறுதிக்கு தகுதி
ரிசர்வ் வங்கி, சேலஞ்சர்ஸ் அணி ஹாக்கி அரையிறுதிக்கு தகுதி
ADDED : மார் 24, 2025 11:38 PM
சென்னை :சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் அணிகளுக்கான ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கின்றன.
வேளச்சேரி கிளப், எம்.சி.சி., - அடையாறு யங்கஸ்ட், இந்திரா காந்தி உள்ளிட்ட 33 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் எட்டு குழுவாக பிரிந்து, லீக் முறையில் வார இறுதி நாட்களில் மட்டும் மோதுகின்றன.
அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை நடந்த மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் சேலஞ்சர்ஸ் மற்றும் செயின்ட் ஜார்ஜ் கிளப் அணிகள் மோதின. அதில், 3 - 1 என்ற கணக்கில் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
சேலஞ்சர்ஸ் வீரர் விஷ்வா, ஹரிகிருஷ்ணன், ஆர்ஷா ஆகியோர், தலா ஒரு கோல்கள் அடித்தனர். செயின் ஜார்ஜ் வீரர் விஷ்ணு, ஒரு கோல் அடித்து ஆறுதல் கொடுத்தார்.
மற்றொரு போட்டியில், ரிசர்வ் வங்கி கிளப் அணி, 4 - 1 என்ற கோல் கணக்கில், வேளச்சேரி ஹாக்கி கிளப் அணியை தோற்கடித்து, வெற்றி பெற்றது. ரிசர்வ் வங்கியின் உமேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, கலையரசன், கருணா சிவா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து, வெற்றிக்கு கைகொடுத்தனர்.
வரும், 29ம் தேதி நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில், சேலஞ்சர்ஸ் - ரிசர்வ் வங்கி கிளப் அணிகள் மோதுகின்றன.