/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெருநாய்களை கட்டுப்படுத்த கோரி குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ADDED : மே 13, 2025 12:25 AM
தாம்பரம் : தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியிருப்போர் நல சங்கத்தினர், மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
வைஷ்ணவா ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
வீட்டு வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கால்நடை மற்றும் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். மழைக்கு முன் அனைத்து மழைநீர் கால்வாய்களை துார்வார வேண்டும். தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, தாம்பரம் மாநகராட்சி 2 - 3வது மண்டல குடியிருப்போர் நலச்சங்கங்களின் இணைப்பு மையம் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்தில், 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பின், மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
***