/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நெற்குன்றம்வாசிகள் அதிருப்தி
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நெற்குன்றம்வாசிகள் அதிருப்தி
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நெற்குன்றம்வாசிகள் அதிருப்தி
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நெற்குன்றம்வாசிகள் அதிருப்தி
ADDED : ஜன 12, 2024 01:04 AM

நெற்குன்றம்,நெற்குன்றம் அகத்தியர் நகர் 1வது தெருவில், சிதிலமடைந்த பக்கவாட்டு கால்வாயில் இருந்து, கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருவதால், பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் 145வது வார்டில், 210 தெருக்கள் உள்ளன. இதில், 150 தெருக்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இவற்றில், பல மழைநீர் வடிகால்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இந்நிலையில், மீதமுள்ள 60 தெருக்களில் இன்னும் மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் சென்னையில் பெய்த மழையில், பல மழைநீர் வடிகால்கள் நிரம்பி உள்ளன. இதில், நெற்குன்றம் அகத்தியர் நகர் முதலாவது தெருவில் உள்ள பக்கவாட்டு கால்வாயில் நிரம்பி, சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.
இதனால், இச்சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அத்துடன், துர்நாற்றம் வீசுவதால், வீட்டு கதவை திறக்க முடியாமல் பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.