/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டத்தில் அமித் ஷாவை கண்டித்து தீர்மானம்
/
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டத்தில் அமித் ஷாவை கண்டித்து தீர்மானம்
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டத்தில் அமித் ஷாவை கண்டித்து தீர்மானம்
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டத்தில் அமித் ஷாவை கண்டித்து தீர்மானம்
ADDED : டிச 20, 2024 12:33 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், நேற்று காலை மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், மண்டல உதவி கமிஷனர் புருஷோத்தமன், செயற்பொறியாளர்கள் சகுபர் உசேன், பாபு, தாசில்தார் சகாயராணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அம்பேத்கரை ஒருமையில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, மண்டல குழு தலைவர் தனியரசு சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தொடர்ந்து, 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின், தீர்மானங்கள் தொடர்பாக நடந்த விவாதத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
கோமதி, 2வது வார்டு சுயேட்சை கவுன்சிலர்: கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சரஸ்வதி தனியார் மருத்துவமனையால் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நேரு நகர் விளையாட்டு மைதானம், பெரியகுப்பம் சுடுகாடு வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
வெளியேற வடிகால் அமைக்க வேண்டும். வார்டில் உயிர்களை காவு வாங்கும் வகையில் மின் பெட்டிகள் திறந்த நிலையில் உள்ளன.
கவி. வீ.கணேசன், 12வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வார்டில், 2.1 கி.மீ., துாரம் வடிகால் உள்ளது. ஆனால், கொசு ஒழிப்பு பணியில் ஒருவர் மட்டுமே உள்ளார். கொசுக்கள், ஈ போல பெரியதாக உள்ளன.
சொக்கலிங்கம், 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: அஞ்சுகம் நகர் - விம்கோ நகர் வரையிலான வடிகாலில், மழைநீர் தேக்கம் உள்ளது. அஜாக்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே, பூங்கா வெளியே பால் பூத் இடையூறாக உள்ளது.
பாரதியார் நகரில் தேங்கும் மழைநீர் வெளியேறவில்லை. மதகுடன் வடிகால் அமைக்க வேண்டும்.
கார்த்திக், 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: கார்கில் நகர், பெரியார் நகர் போன்ற பகுதிகளில் சாலைகள் பழுதடைந்துள்ளன. மேலும், 5 கோடி ரூபாய்க்கு சாலை திட்டப்பணிகள் கொண்டு வரவேண்டும். கார்கில் நகரில் குடிநீர் வரவில்லை.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், சரியான பதிலளிப்பதில்லை. எல்லையம்மன் கோவில் 'அம்மா' உணவகத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் விட்டது தவறு.
'அம்மா' உணவகம்
தனியரசு, தி.மு.க., மண்டல குழு தலைவர்: பொங்கல் வேட்டி - சேலை கார்டுதாரர் அனைவருக்கும் வழங்க வேண்டும். நீர் வாட்டம் பார்க்காமல் மழைநீர் வடிகால் அமைத்துள்ளனர். அண்ணாமலை நகர் ரயில்வே சுரங்கபாதை உயரம் குறைப்பதில் யாருக்கும் உடன்பாடில்லை.
இது குறித்து, வடசென்னை எம்.பி., கலாநிதி, ரயில்வே அமைச்சரிடம் பேசியுள்ளார். 'அம்மா' உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. தினமும், 14 எம்.எல்.டி., குடிநீர் வினியோகமாகிறது. குடிநீர் பற்றாக்குறை இருக்க கூடாது.