ADDED : ஜன 06, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார், திரு.வி.க.நகர் மண்டலம், கொளத்துார், சீனிவாசநகரில் உள்ள அரசுபள்ளி வளாகத்தில், 64வது வார்டுக்குட்பட்ட மக்களுக்கான குறை தீர் முகாம் நேற்று நடந்தது.
இதில் துணை வட்டார அலுவலர் பிரவீன்குமார் ஐ.ஏ.எஸ்., முன்னிலையில், மண்டல அதிகாரி முருகன், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் பங்கேற்க, பொது மக்கள் பல்வேறு குறைகளை மனுக்களாக வழங்கினர்.
மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டு, அங்கேயே 110 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.