/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கமிஷனர் ஆபீசில் அளித்த 978 மனுக்களுக்கு தீர்வு
/
கமிஷனர் ஆபீசில் அளித்த 978 மனுக்களுக்கு தீர்வு
ADDED : நவ 24, 2024 12:33 AM

சென்னை,சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், குறைதீர்ப்பு முகாமில் கொடுக்கப்பட்ட, 1,976 மனுக்களில், 978 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மண்டல வாரியாக ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் போலீசார் முதல் உதவி கமிஷனர்கள் வரை உள்ளவர்களுக்கு, குறைதீர்ப்பு முகாம் நடந்தது.
இதில் குடியிருப்பு கோருதல், பணிமாறுதல் கோருதல், ஊதியம் நிர்ணயம் செய்தல், ஊதிய நிலுவை தொகை, தண்டனை ரத்து செய்தல், பதவி உயர்வு உள்ளிட்ட, 1,976 மனுக்கள் கொடுக்கப்பட்டன.
மனுக்களை பெற்ற போலீஸ் கமிஷனர் அருண், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விரைந்து தீர்வு காணவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி போலீஸ் அதிகாரிகள் விரைந்து எடுத்த நடவடிக்கையால், 978 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள, 998 மனுக்களுக்கு தீர்வு காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், ஜூலை, 8ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட, 391 மனுக்களில், 282 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

