/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.50,000 லஞ்சம் பெற்ற வழக்கு ஓய்வு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
/
ரூ.50,000 லஞ்சம் பெற்ற வழக்கு ஓய்வு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
ரூ.50,000 லஞ்சம் பெற்ற வழக்கு ஓய்வு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
ரூ.50,000 லஞ்சம் பெற்ற வழக்கு ஓய்வு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
ADDED : நவ 19, 2025 04:09 AM
சென்னை: கூடுதல் மின் கட்டண தொகையை ஈடுகட்ட, 2.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட மின்வாரிய முன்னாள் மேற்பார்வையாளருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேற்கு அண்ணாநகர், சிண்டிகேட் வங்கி காலனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், வேளச்சேரியில் உள்ள ஊட்டி காய்கறி மற்றும் பழக்கடையின் பங்குதாரராக உள்ளார்.
இந்த கட்டடத்துக்கு, 2009 டிசம்பர் முதல் 2011 பிப்ரவரி வரையிலான காலத்தில், கூடுதல் மின் கட்டணமாக, 8 லட்சத்து 4,979 ரூபாய் செலுத்த வேண்டியது தணிக்கையில் தெரியவந்தது. செந்தில்குமாருக்கு, மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.
வேளச்சேரி மின்வாரி ய அலுவலகம் சென்ற செந்தில்குமார், அங்குள்ள கணக்கு பிரிவு மேற்பார்வையாளர் சேதுராமனை சந்தித்து விபரம் கேட்டார்.
கட்டணத்தை, 1.50 லட்சம் ரூபாயாக குறைக்க, 2.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதற்கட்டமாக, 50,000 வழங்க கோரி உள்ளார்.
இதை விரும்பாத செந்தில்குமார், சென்னை லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, 2012 ஆக., 2ல், 50,000 ரூபாயை செந்தில்குமார் கொடுத்தபோது, சேதுராமனை, போலீசார் கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ஜெகநாதன் முன் நடந்தது. இதற்கிடையே, சேதுராமன் ஓய்வு பெற்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சேதுராமன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அப ராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

