/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வு பெற்ற காவல் துறை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
ஓய்வு பெற்ற காவல் துறை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 19, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சென்னை சார்பில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத்தின் தலைவர் வேலுசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காவல் துறையில் ஒரு பதவிக்கு ஒரே மாதிரியான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் காவலர் மருத்துவமனை அமைக்க வேண்டும். காவலர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
காவலர்கள் ஓய்வு பெறும்போது, 50 சதவீத மானியத்தில் வீடு வழங்க வேண்டும் உட்பட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.