ADDED : நவ 29, 2026 03:37 PM
அ நிறம் | அளவு
சேலையூர்: தாம்பரத்தில் ஓய்வு பெற்ற ரயில் ஓட்டுனரான சிவபிரசாத், 62, என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவபிரசாத் ராவ்; ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுனர். இவர், மனைவி மற்றும் மகனுடன், கிழக்கு தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
வயிறு மற்றும் மூட்டு வலியால் அவதியுற்று வந்த சிவபிரசாத் ராவ், நேற்று (நவ.,28) இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலையூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
