/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் திருடர்களை பிடித்த போலீசாருக்கு வெகுமதி
/
பைக் திருடர்களை பிடித்த போலீசாருக்கு வெகுமதி
ADDED : ஆக 18, 2025 11:54 PM

சென்னை, மெரினாவில், வாகன சோதனையின்போது, இருசக்கர வாகன திருடர்களை பிடித்து, சட்டம் - ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைத்த, போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கு, கூடுதல் கமிஷனர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பத்மநாபன், காவலர் பாலாஜி ஆகிய இருவரும், நேற்று முன்தினம் இரவு, மெரினா லுாப் சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகிக்கும் வகையில் கே.டி.எம்., இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த இருவரை வழிமறித்து பிடித்தனர். வாகனத்தின் ஆவணங்களை கேட்டபோது, இருவரும் முன் பின் முரணாக பதில் அளித்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார், வாகன எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், பல்லாவரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான வாகனம் என்பதும், இருவரும் சேர்த்து அதை திருடி வந்ததும் தெரிந்தது. இருவரையும் பிடித்து, மெரினா காவல் நிலையத்தில், போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பைக் திருடர்களை பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் பத்மநாபன், காவலர் பாலாஜி ஆகிய இருவரையும், கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் நேற்று, நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

